Monday 19 December 2011

6442 தமிழர்கள் நாம்...

         வீரம்,காவியம்,காதல்,பண்பு,படைப்பு,விருந்தோம்பல்,படை,பக்தி மற்றும் பலம் பொருந்திய தமிழர்கள் நாம்... ஆனால் ஞாபகசக்தி என்பது மட்டும் இந்த மறத்தமிழனுக்கு குறைந்து போனது ஏனோ..?
         பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து போராடும் தமிழன் இலவச அரிசி என்றால் அமைதியாகி விடுவான்.
         இலங்கை தமிழனுக்கு குரல் கொடுக்கும் தமிழன் இடைதேர்தலில் பொய் வாக்குறுதிகளுக்கும், பணக்கட்டுகளுக்கும் இரையாகி போவான். தமிழன் போராடி வெல்வான், வெல்ல வேண்டும். அதற்கு ஆரம்ப புள்ளியாய் அனலை நான் ஆரம்பிக்கிறேன் என்று தீக்குளித்து வீரமரணம் எய்திய முத்துகுமார் உயிர்க்கு இன்று வரை நாம் சாந்தி கொடுத்தோமா..?
         காவிரி நீருக்கு தீர்வு கிடைத்து விட்டதா..? முல்லை பெரியாறு மட்டும் ஞாபகத்தில்..?
         மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லபடுவது ஒப்பந்தம் இயற்றியும் நிறுத்தியாச்சா..?
         2ஜி ஊழல் இப்போது நமக்கு சாதாரணமாய் போய்விட்டது... மின்சாரத் துண்டிப்பும் நமக்கு பழகிவிட்டது.
         மூன்று வருடம் தூங்கிவிட்ட தருவாயில் எதற்கடா கூடங்குளத்தில் போராட்டம்..?
          மறப்போம்... மன்னிப்போம்... பழமொழியை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல விஷயங்களில் மன்னிக்கவே மறந்து விடுகிறோமே தமிழா...
          வேதனையாய் இல்லையா..! வெட்கமாய் இல்லையா..? பழம் பெருமை பேசிப் பேசி கிழவர்களாய் ஆனதுதான் மிச்சம்.இலவச தொலைக்காட்சக்கும், இலவச அரிசிக்கும், அன்பளிப்பு பொருட்களுக்கும், அரசு ஆடு மாடுகளுக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைக்கும் தமிழா, ஆண்டவன் கொடுத்த இரண்டு கைகளையே மறந்து விட்டாய்..? இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகதில் தன் கையே தனக்குதவி என்கிற குருவிகளின் சிறுகதையை மறந்து தினசரி வாழ்வில் மதுபானக் கடைக்கு போகும் அளவிற்கு வருமானம் இருந்தால் போதும் என்கிற மனப்பான்மை வ்ந்தது ஏன்..?
          மதுபானக் கடையில் வரும் வருமானத்தில்தான் அரசாங்கமே நடக்கிறதாம். தூ... வெட்கக்கேடு.
                     நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள்
                     நாட்டை கெடுத்ததோடு தானும் கெட்டார்...
                    அல்லும் பகலும் சிலர் கல்லாய் இருந்துவிட்டு
                    அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக்கொண்டார்...
                    விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்,
                    உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டைவிட்டார்...

Friday 16 December 2011

என்னுடைய முதல் பதிவு

       எனது பெயர் மோகன்குமார், எனது பொழுதுபோக்கு விளையாடுவதும், பாடல்கள் கேட்பதும்.நான் கடந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனது கல்லூரி காலம், நான் பள்ளியில் படித்ததை விட நன்றாக இருந்தது...

       எனக்கு முன்பு வலைதளத்திலும், இணையதளத்திலும் நேரத்தை செலவிட ஈடுபாடு இல்லை.பிறகு, எனது நண்பர் முலம் வலைதளத்தை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் அறிந்து கொண்டேன்.

       இதற்கு தேவையான முக்கியமான ஒன்று ஆர்வம்.ஆர்வம் இருந்தல் வலைத்தளத்தை எப்படி வேண்டுமென்றாலும் பயன்டுத்தலாம்...

                 மீண்டும் விரைவில் சந்திகலாம், புதிய செய்திகளுடன்...